மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கீதா உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு

252 0

கீதா கும்மராசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்து வழங்கப்பட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கீதா கும்மராசிங்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

குறித்த தீர்ப்பு தொடர்பில் தனது சட்டத்தரணிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கீதா குமாரசிங்க இரட்டைக் குடியுரிமை பெற்றுக்கொணடவர் என்பதால் அவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வகிக்க முடியாது என கடந்த 3ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனை அடுத்து, கீதா குமராசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், மஹிந்த தேசப்பிரியவிற்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.