வெள்ளைவேன் கடத்தல் – விசாரணை ஆவணக்கோப்பு களவு

656 0

S3490011-450x253முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற வெள்ளைவேன் கடத்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் ஆவணக்கோப்பு ஒன்று களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது திருகோணமலை  கடற்படை முகாமில் இருந்து திருடப்பட்டுள்ளதாக  செய்தித்தாள் கூறுகிறது.
இந்த வருடம் மார்ச் 29ஆம் திகதியன்று அந்த ஆவணம் திருடப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
லெப்டினன்ட் கொமடோர் கே. சி வெலகெதரவின் சாட்சியங்கள் அடங்கிய ஆவணமே திருடப்பட்;டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆவணத்தில், வெள்ளைவேன் கடத்தல்களில்  அரசியல்வாதிகளும் கடற்படையினரும்  ஈடுபட்டமைக்கான சாட்சியங்கள் அடங்கியிருந்தன.
ஏற்கனவே கடற்படைக்கு தெரியாமல் வெளிநாடு சென்றமைக்காக வெலகெதரவுக்கு இராணுவ நீதிமன்ற விசாரணையும் நடத்தப்பட்டது.
இதன்போது அவருக்கு பதவிக்குறைப்பு செய்யப்பட்டபோதும் அது பின்னர் ஜனாதிபதி மைத்திரிபாலவினால் இடைநிறுத்தப்பட்டது.
இதேவேளை லெப்டினன்ட் கொமடோர் வெலகெதர தொடர்ந்தும் கடற்படை தடுப்பில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.