மத்திய வங்கியின் முறி கொள்வனவு முறைகேடு –கோப்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில்

349 0

1073906107CBSLமத்திய வங்கி முறி கொள்வனவில் முறைகேடு என்ற குற்றச்சாட்டு தொடர்பில் நாடாளுமன்ற கோப் குழு நடத்திவரும் விசாரணைகளின் அறிக்கை, எதிர்வரும் ஆகஸ்ட் 12ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
கோப் குழுவின் உறுப்பினர் ஒருவரின் தகவல்படி, இந்த முறிக்கொள்வனவு தொடர்பில் முழுமையான விசாரணைகள் முடிவடைந்துள்ளன.
இந்த கொள்வனவு தொடர்பில், கோப் குழு, மத்திய வங்கியின் நிதிச்சபையினரின் வாக்குமூலங்களையும் பதிவுசெய்திருக்கிறது.
இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் முன்னர் இந்த அறிக்கை, மீண்டும் மீளாய்வு செய்யப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.