மலையகத்தில் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு தமிழகத்தில் இருந்து ஆசிரியர்களை அழைத்துவர எதிர்ப்பு

265 0
மலையகத்தில் நிலவும் உயர்தர வகுப்புகளுக்கான விஞ்ஞான மற்றும் கணித பிரிவு ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு தமிழகத்தில் இருந்து ஆசிரியர்களை அழைத்துவர எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர்கள் சங்கம் இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
மலையக ஆசிரியர் பற்றாக்குறையை நீக்குவதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கல்வி ராஜாங்க அமைச்சர் வீ.ராதாகிருஷ்ணன் கூறி இருந்தார்.
இது தொடர்பில் எதிர்வரும் 11ம் திகதி இலங்கை வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்ராலின் மற்றும் இலங்கை ஆசிரிய சேவையாளர்கள் சங்கத்தின் பொது செயலாளர் மகிந்த ஜெயசிங்க ஆகியோர் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
மலையகத்தில் பாரிய ஆசிரியர் தேவை இருக்கின்றன.
ஆனால் அந்த பதவி வெற்றிடங்களுக்கு வடக்கிலும் கிழக்கிலும் தொழில் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற பட்டதாரிகளை இணைக்க முடியும்.
இதனை விடுத்து இந்தியாவில் இருந்து ஆசிரியர்களை கொண்டுவர முயற்சிப்பது, வேடிக்கையான விடயம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் ஜனாதிபதி தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்