வெளி மாவட்ட மீனவர்களின் வருகையே முல்லை மீனவர்களின் வறுமைக்கு காரணம் – ரவிகரன்

558 0

ravikaran 8546554652முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறுமை நிலைக்கு தள்ளப்பட்டமைக்கு வெளிமாவட்ட மீனவர்களின் வருகையும் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளுமே காரணம் என வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் முகத்துவாரம் முதல் சுண்டிக்குளம் பேய்ப்பாறைப்பிட்டி வரைக்குமான சுமார் 73 கிலோ மீற்றர் நீளமான கடற்கரையோரப்பகுதிகளிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் சுமார் நான்காயிரத்து 500 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தொழிலான கடற்றொழில்; நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இப்பகுதியில் குறிப்பாக நாயாறு முகத்துவாரம் சாலை உள்ளிட்ட பகதிகளில் தென்பகுதி மீனவர்களின் அத்துமீறிய குடியேற்ற நடவடிக்கைகள், நிபந்தனைகளை மீறிய அட்டைத்தொழில்; மற்றும் சட்டவிரோததொழில் நடவடிக்கைகளால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்;டு பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய மீனவர்;களின் வாழ்வாதாரம் பாதிக்கப்;பட்டுள்;ளது.

இவற்றைத் தடுப்பதற்கு உரிய அதிகாரிகள் எதுவித நடவடிக்;கைகளையம் மேற்கொள்ளவில்லை எனவும் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் மேலும் தெரிவித்துள்ளார்.