ராஜித சேனாரத்னவை பதவி நீக்குவதற்கு சுதந்திரக் கட்சிக்கு அதிகாரம் கிடையாது – தயா கமகே

252 0

அமைச்சரவை இணை பேச்சாளராக பதவி வகிக்கும் அமைச்சர் ராஜித சேனாரத்னவை பதவி நீக்குவதற்கு சுதந்திரக் கட்சிக்கு அதிகாரம் கிடையாது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தீர்மானம் எடுப்பார். சுதந்திர கட்சியினர் நீக்குவதற்கு ராஜித சேனாரத்ன ஒன்றும் சுதந்திரக் கட்சியின் ஊடக பேச்சாளர் கிடையாது. சுதந்திரக் கட்சியினருக்கு நினைத்த மாதிரி செயற்பட இடமளிக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் அமைச்சருமான தயா கமகே தெரிவித்தார்.

உணவு பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவ தொடர்பான செயலமர்வு இன்று பத்தரமுல்லை வொட்டர்ஸ் ஏஜ் ஹொட்டலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அமைச்சர் தயா கமகே கலந்து கொண்டார். இதன்பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.