இரட்டைக் குடியுரிமையுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகவல்களை கோரியுள்ள கம்மன்பில

252 0

இரட்டைக் குடியுரிமையுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை கோரி, பிவிதுரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

தகவலறியும் சட்டத்தின் விதிமுறைகளுக்கு அமைய தான் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் இரட்டைக் குடியுரிமையுடை கீதா குமராசிங்க, நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கு தகுதியில்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.