விசாரணை அதிகாரிகளுக்கு பற்றாக்குறை: வௌியில் இருந்து தெரிவு செய்ய யோசனை

249 0

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளாக வௌியில் இருந்து நபர்களை நியமனம் செய்ய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் 450 விசாரணை அதிகாரிகள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 200 பேரே உள்ளதோடு, இவர்கள் அனைவரும் பொலிஸ் அதிகாரிகளாகும்.

இந்தநிலையில், குறித்த பதவிக்கு தகுதியான பொலிஸ் உத்தியோகத்தர்கள் இல்லாமையால், போதுமான அதிகாரிகளை நியமிக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளதாக, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதுஇவ்வாறு இருக்க, விசாரணை அதிகாரிகளாக வௌியில் இருந்து நபர்களை நியமிக்கும் யோசனை ஒன்று ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதனை அமைச்சரவையில் சமர்ப்பித்து, அதன் அனுமதியைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கல்விப் பொதுத்தராதர உயர்தரம் மற்றும் பல்கலைக்கழக படிப்பினை நிறைவு செய்தவர்கள் இதன்பொருட்டு நியமிக்கப்பட்டவுள்ளனர்.