உலகிலேயே மிக நீளமான புத்தர் இலங்கையில்

261 0

உலகிலேயே மிக நீண்ட மணல் புத்தரை இலங்கையில் உருவாக்க நடவக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புகழ்பெற்ற மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் இந்த நீண்ட புத்தரை உருவாக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 14வது சர்வதேச வெசாக் தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக, கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தன்னை அழைத்திருப்பதாக பட்நாயக் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாராளுமன்ற கட்டடத் தொதிக்கு அருகில் உலகின் மிக நீண்ட மணல் புத்தரை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக புகழ்பெற்ற மணல் கலைஞர் தெரிவித்துள்ளார்.சர்வதேச வெசாக் தின நிகழ்வு, எதிர்வரும் 10ஆம் திகதி முதல் ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ளனன. இந்நிலையில், 50 அடி நீளம் கொண்ட மணல் புத்ததரை நாளை முதல் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக பட்நாயக் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட கலைஞர் சுதர்சன் பட்நாயக், சமீபத்தில் 10ஆவது மாஸ்கோ சாண்ட் கலை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.