தலதா மாளிகை வளாகத்தில் பொலித்தீன் பாவனைக்குத் தடை!

285 0

தலதா மாளிகை வளாகத்தை பசுமை வலயமாக பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாக உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பைஸர் முஸ்தபா, கட்டுகஸ்தோட்டை கொஹாகொட குப்பை மேட்டை கண்காணிக்கும் பணியில் நேற்று ஈடுபட்டிருந்தார்.இதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,தலதா மாளிகை வளாகத்தில் பொலித்தீன் கொண்டுவருவது முற்றாக தடை செய்யப்படவுள்ளது.

அத்துடன், தலதா மாளிகை பகுதியில் உள்ள குப்பைகளை அகற்ற மாநகர சபையில் தனியானதொரு பிரிவை நிறுவவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

மாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடியதன் பின்னர், குறித்த பிரிவை நிறுவ எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனூடாக தலதா மாளிகை வளாகத்தை பசுமை வலயமாக பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.