வடக்கு சித்த மருத்துவ துறைக்கு மருந்து உற்பத்தி்நிலையத்தை கல்மடுவில் அமைக்க திட்டம் – சுகாதார அமைச்சர்

292 0
வட மாகாணத்தில் இயங்கும் 68 சித்த மருத்துவமனைகள் மற்றும் 500 வரையான சித்த மருத்துவர்களின் மருத்து தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் ஓர் மருந்து உற்பத்தி நிலையத்தினை கிளிநொச்சி மாவட்டம் கல்மடுப் பிரதேசத்தினில் நிறுவுவதற்கு வட மாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
இது தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,
இலங்கையின் வட மாகாணத்திலேயே சித்த வைத்தியம் அதிகமாக காணப்படுகின்றது. ஏனைய மாகாணங்களில் ஆயுள்வேத வைத்தியமுறையே கானப்படும் . இதனால் சித்த வைத்திய முறையிலான வைத்தியர்களிற்கான மூலிகைகள் மருந்து வகைகளைப் பெற்றுக் கொள்வதில் பெரும் நெருக்கடி நிலமையே தற்போது வரைநால் கானப்படுகின்றது. இதற்காக யாழ்ப்பாணம் அச்சுவேலிப் பிரதேசத்தில் ஓர் மருந்து உற்பத்தி நிலையம் காணப்படுகின்றபோதும் அங்கும் போதிய உற்பத்தி காணப்படவில்லை.
இதனால் வட மாகாணத்தில் கானப்படும் சித்த வைத்தியத்தின் மருத்து வகைகள் தற்போது அதிகமாக இந்தியாவில் இருந்தே தருவிக்கப்படுவதனால் இவற்றிற்கு விதிக்கப்படும் வரிகளும் பெறுமதிகளும் அதிகமாகவே கானப்படுகின்றது. இவற்றினைக் கருத்தில்க் கொண்டு ஓர் திட்டமிடலை மேற்கொண்டோம். இதன் பிரகாரம் வட மாகாண சித்த வைத்தியத் துறைக காக கிளிநொச்சி கல்மடு நகரில் உள்ள 100 ஏக்கர் நிலத்தின் 75 ஏக்கரை மூலிகைப் பண்ணை மேற்கொண்டு அதில் பெறப்படும் மூலிகைகளில் இருந்து மருந்து உற்பத்தியினையும் மேற்கொள்ளவுள்ளோம்.
இவற்றின் அடிப்படைநில் கல்மடுப் பண்ணையில் அப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்களைத் தலமைத்துவமாக கொண்ட குடும்பங்களில் 40பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களிற்கான மூலிகைச் செடிகளும் எம்மால் வழங்கப்பட்டு அரை ஏக்கர் நிலம் வீதம் இவர்களை செய்கையில் ஈடுபடுத்தியுள்ளோம். இவ்வாறு மேற்கொள்ளப்படும் செய்கை கடந்த 8 மாதங்களாக இடம்பெறுகின்றது. இந்தக் காலத்தில் இவ் உற்பத்தியில் ஈடுபடுபவர்களிற்கு நாள் ஒன்றிற்கு 500 ரூபா வீதம் வழங்கப்பட்டது.
இனி விரைவில் இப் பண்ணையிலேயே எஞ்சிய நிலத்திலும் மூலிகைகளைப் பயிரிடுவதோடு மருந்து உற்பத்தி நிலையத்தினையும் ஆரம்பிக்க உள்ளோம். இதற்கான திட்ட அறிக்கையினை மத்திய சுகாதார அமைச்சு கோரியிருந்த்து.்அதன் அடிப்படையில் மேற்படி திட்டம் தயார் செய்யப்பட்டு மத்திய சுகாதார அமைச்சிடம் கையளித்து அதற்கான தேவைகளும் எடுத்துக் கூறப்பட்டது. இவற்றின் அடிப்படையில் இதனை படிப்படியாக அமைக்க அமைச்சு இணங்கியுள்ளது. அதனால் மேற்படி மருந்தகம் அடுத்த ஆண்டிற்குள் அமைக்கப்படும் என்றார்.