2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தபால் மூலம் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவித்தலில் குறிப்பிடப்படுவதாவது,
தபால் மூலம் வாக்களிக்கவுள்ள வாக்காளர்கள் தங்களது ஆளடையாளத்தை உறுதி செய்துக்கொள்வதற்கு பின்வரும் அடையாள அட்டைகளை பயன்படுத்த முடியும்.
1. தேசிய அடையாள அட்டை
2. செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம்
3. செல்லுபடியாகும் கடவுச்சீட்டு
4. தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்படும் அடையாள அட்டை
5. ஆட்பதிவு திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் தகவல்கள் உறுதிசெய்யும் கடிதம்