சூதாட்ட விடுதியில் தகராறு ; இளைஞன் கொலை ; தம்பதி கைது

12 0
புத்தளம், ஆனமடுவ பிரதேசத்தில் உள்ள சூதாட்ட விடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறில் இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தம்பதியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனமடுவ, வடத்த, ஹல்மில்லேவ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

சம்பவ தினத்தன்று, குறித்த இளைஞன் ஆனமடுவ பிரதேசத்தில் உள்ள சூதாட்ட விடுதி ஒன்றுக்குச் சென்றுள்ளார்.

இதன்போது அங்கிருந்த கணவன், மனைவி இருவருக்கும் இளைஞனுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

அவ்வேளை, அந்த தம்பதி இளைஞனை பொல்லால் தாக்கிக் கொலை செய்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்களான கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட இளைஞனின் தாயினது தம்பியும் அவரது மனைவியுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் முந்திரி கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களின் கடையும் சூதாட்ட விடுதிக்கு முன்பாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.