மட்டக்களப்பு – பாசிக்குடா கடற்கரைக்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை

15 0

கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான மட்டக்களப்பு – பாசிக்குடா கடற்கரைக்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதை அவதானிக்க முடிகிறது.

சித்திரைப் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பாசிக்குடா கடற்கரையை நோக்கி படையெடுக்கின்றனர்.

கடற்கரைக்கு குடும்பத்துடன் வரும் பயணிகள் தாங்கள் மகிழ்ச்சியான முறையில் பொழுதைக் கழிக்க கடலில் நீராடுவதோடு, விளையாட்டுக்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடற்கரை பகுதியில் இரண்டு மலசலகூடங்கள் மாத்திரமே காணப்படுவதால் பெருந்திரளாக கடற்கரைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய இயற்கைத் தேவைகளை நிறைவேற்ற பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் வாழைச்சேனை பிரதேச சபை நிருவாகத்தினர் கவனம் செலுத்தி அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருமாறு சுற்றுலாப் பயணிகள் வேண்டிக் கொள்கின்றனர்.