குண்டு மனிதர்கள் இடையே இருக்கை ஒதுக்கீடு: நஷ்டஈடு கேட்டு விமான பயணி வழக்கு

293 0

குண்டு மனிதர்கள் இடையே இருக்கை ஒதுக்கீடு செய்தது தொடர்பாக ரூ.50 லட்சம் நஷ்டஈடு கேட்டு விமான பயணி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள உலாங் காங்கை சேர்ந்தவர் மைக்கேல் அந்தோனி டெய்லர். இவர் அமெரிக்காவின் ஏர்லைன்ஸ் விமானத்தில் சிட்னியில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு பயணம் செய்தார்.

விமானத்தில் அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையின் இருபுறம் உடல் குண்டான மனிதர்கள் அமர்ந்திருந்தனர். இதனால் அவருக்கு அசவுகரியம் ஏற்பட்டது. கழிவறைக்கு கூட செல்ல முடியாமல் அவதிப்பட்டார். 14 மணி நேரம் பயணம் செய்த அவருக்கு கழுத்து வலி, முதுகு வலி மற்றும் பின்புறத்தில் காயம் ஏற்பட்டது. எனவே தனது இருக்கையை மாற்றி தருமாறு விமான ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர். பல தடவை சென்று கோரிக்கை விடுத்தும் அதை அவர்கள் நிராகரித்து விட்டனர். இச்சம்பவம் கடந்த 2015-ம் ஆண்டு நடந்தது. இந்த நிலையில் மைக்கேல் அந்தோணி அமெரிக்க ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மீது நஷ்ட ஈடு கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் தனக்கு விமான நிறுவனம் ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரியுள்ளார்.