தான்சானியாவில் பள்ளி பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றங்கரையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் இரண்டு ஆசிரியர்கள் உள்பட 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிழக்கு ஆப்பரிக்கா நாடான தான்சானியாவில் உள்ளது அருஷா மாகாணம். இங்குள்ள ஒரு பள்ளியில் படிக்கும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக பஸ் ஒன்றில் ஆசிரியர்களுடன் சென்று கொண்டிருந்தார்கள். பஸ் மியாட்டு மாவட்டத்தில் உள்ள மிலேரா ஆற்றங்கரையோரம் அருகில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, ஆற்றங்கரையோரம் உள்ள பெரிய பள்ளத்தில் உருண்டு விழுந்தது. இதில் இரண்டு ஆசிரியர்கள், 32 மாணவர்கள் மற்றும் பஸ் டிரைவர் என 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த அதிபர் ஜான் மகுபுலி, இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.