ரஷ்யாவில் சீன நிறுவனம் உருவாக்கிய பிரபல சமூக வலைத்தள செயலியான வீசாட் முடக்கப்பட்டுள்ளது. ரஷ்ய கண்காணிப்பு அமைப்பிற்கு ஒத்துழைக்காத காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் சீன சமூக வலைத்தள செயலியான வீசாட் முடக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் தகவல் பரிமாற்ற அமைப்பிற்கு காண்டாக்ட் தகவல்களை வழங்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 4-ந்தேதி முதல் சீனாவின் பிரபல செயலி பயன்பாடு முடக்கப்பட்டுள்ளது என ரஷ்ய இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் லின்க்டு இன் செயலியை முடக்கியது. இந்த செயலியை பயன்படுத்துவோரின் தகவல்களை ரஷ்ய சர்வெர்களில் சேமிப்பிற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதால் ரஷ்யா செயலியை முடக்கியது.
2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வீசாட் செயலி ரஷ்யாவில் அதிக பிரபலமாக இல்லை, என்றாலும் சீன சுற்றுலா பயணிகள் மற்றும் ரஷ்யர்களுக்கு இந்த செயலி முடக்கப்பட்டது பாதிப்பை ஏற்படுத்தும். கடந்த ஆண்டு நிலவரப்படி ரஷ்யாவில் விகாண்டாக்டெ (VKontakte) மற்றும் வாட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட செயலிகள் அதிக பிரபலமானவையாக உள்ளது. சீனாவில் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளது.