வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால், முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் கவனயீர்ப்பு போராட்டம் 60 ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.
இறுதி யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்த மற்றும் ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்ட உறவுகள் தொடர்பில் உரிய பதிலை அரசு வழங்காத நிலையில், உறவினர்களால் பல்வேறு போராட்டங்கள் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டன.
அந்தப் போராட்டங்களைத் தொடர்ந்து தற்போது முல்லைத்;தீவு மாவட்ட செயலகம் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தொடர் கவனயீர்ப்பு போராட்டம், இன்று 60 ஆவது நாளை எட்டியுள்ளது.