பேரீத்தம் பழத்திற்கு புதிதாக எவ்வித வரியும் அறவிடப்படவில்லை

250 0

ரமழான் மாதத்தை முன்னிட்டு இறக்குமதி செய்யப்படவுள்ள பேரீத்தம் பழங்களுக்காக எவ்விதமான புதிய வரிகளும் அறவிடப்படவில்லை என்று நிதியமைச்சின் வர்த்தக மற்றும் முதலீட்டு கொள்கைப பிரிவு கூறியுள்ளது.

ஒரு கிலே கிராம் பேரீத்தம் பழத்திற்கு 60 ரூபா விஷேட வர்த்தக பொருள் வரி மாத்திரமே தற்போது நடைமுறையில் இருப்பதாக அந்தப் பிரிவு வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு 130 ரூபாவாக இருந்த அந்த வரி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வௌியிடப்பட்ட விஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் 60 ரூபாவாக குறைத்ததாக வர்த்தக மற்றும் முதலீட்டு கொள்கைப பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குறித்த வரியே தொடர்ந்து பேணிச் செல்லப்படும் என்றும் வேறு புதிய வரிகள் அறவிடப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.