அரசாங்கத்துக்கும் மாகாண சபைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு சீராக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி

244 0
தேசிய அபிவிருத்தி இலக்குகளை அடைவதாயின் அரசாங்கத்துக்கும் மாகாண சபைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு சீராக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
33 ஆவது முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
நாட்டின் தேசிய அபிவிருத்தி இலக்குகளை எட்டுவதற்கு மாகாண சபை செயற்பாடுகள் முறையாக இருக்க வேண்டும்.
அத்துடன் அரசாங்கத்துக்கும் மாகாண சபைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பும் சீர் செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.
ஒன்பது மாகாண சபைகளும் ஒன்பது விதமாக செயற்படுவதனால் நாட்டின் பொது அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் பெரும் சிக்கல் நிலவுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, மாகாண சபைகள் பொதுவான உடன்பாட்டுடன் இயங்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக் காட்டினார்.