தெஹியத்தகண்டிய பகுதியில் நீரில் மூழ்கி பொலிஸ் கான்ஸ்டபிள் மரணம் !

10 0

தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரகஸ்வெவவில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெஹியத்தகண்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் சனிக்கிழமை (12) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர், கிராந்துருகோட்டே பகுதியைச் சேர்ந்த அரச புலனாய்வு சேவை தலைமையகத்தில் பணியாற்றும் 29 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவார்.

இவர் தனது நண்பர்களுடன் நீந்திக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணையை தெஹியத்தகண்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.