மலேசியாவில் மின்சாரம் தாக்கியதில் இலங்கையைச் சேர்ந்த இளைஞனும் அவரது வளர்ப்பு நாயும் உயிரிழப்பு

9 0
மலேசியாவில் மின்சாரம் தாக்கியதில் இலங்கை இளைஞரும் அவரது நாயும் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் மலேசியாவின் ஷா ஆலம் டமான் ஆலம் இண்டாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த நபர் 27 வயதுடையவர் ஆவார்.

கட்டுமானப் பொருட்கள் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெள்ளத்தில் மின்சாரம் தாக்கி இலங்கை இளைஞரும் அவரது நாயும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கட்டுமாண பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கட்டடமொன்றுக்கு அருகிலிருந்து இளைஞனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இறந்த இளைஞனின் உடலில் எந்த காயங்களும் இல்லை என்பதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.