இந்த அவசர தொலைபேசி இலக்கங்கள் 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, போக்குவரத்து சேவைகள் தொடர்பில் தகவல் அறிந்துகொள்ளுவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அல்லது 0712 595 555 என்ற வாட்ஸ்அப் இலக்கத்துக்கு தொடர்பு கொள்ள முடியும்.
மேலும், பஸ் சேவைகள் தொடர்பில் தகவல் அறிந்துகொள்ளுவதற்கு 1958 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கும், ரயில் சேவைகள் தொடர்பில் தகவல் அறிந்துகொள்ளுவதற்கு 1971 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கும் தொடர்பு கொள்ள முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.