ஐஸ் போதைப்பொருளுடன் கைதான சந்தேகநபர்

12 0

அத்துருகிரிய – மஹதெனிய பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (12) பிற்பகல் அத்துருகிரிய பொலிஸார் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது.

கைதான சந்தேகநபரிடமிருந்து 11 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

25 வயதுடைய அத்துருகிரிய, ஒருவல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.