நுரைச்சோலை அனல் மின் நிலைய தீயணைப்பு ஊழியர்கள் வெளியேறியது ஏன்?

12 0

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் பணியாற்றிய தீயணைப்பு படை ஊழியர்கள் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் தங்கள் கடமைகளை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கும் தீயணைப்பு படைக்கும் இடையிலான ஒப்பந்தக் காலம் முடிவடைந்துவிட்டதாலும், ஒப்பந்தக் காலத்தை புதுப்பிக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமையுமே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, தீயணைப்பு படை ஊழியர்கள் இது குறித்து தங்கள் தலைமையகத்திற்குத் தெரிவித்துவிட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், நாம் (தெரண) நடத்திய விசாரணையில் நுரைச்சோலை நிர்வாகம் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்குமாறு நிறுவனத்திற்குத் தெரிவித்திருந்தமை தெரியவந்தது.

அதன்படி, ஒப்பந்தங்கள் முடிவதற்கு முன்பே 15 பேர் கொண்ட குழு அங்கு நிறுத்தப்பட்டிருந்தாலும், அந்த எண்ணிக்கை 10 ஆகக் குறைக்கப்படும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட மின் நிலையத்தில் தற்போது பயிற்சி பெற்ற தீயணைப்பு பிரிவு இல்லாத சூழலில், அவசரகால சூழ்நிலையில் செயல்பட தகுதியான தரப்பினர் யாரும் இல்லாதது, மின் நிலையத்தை மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் தள்ளும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.