வன்னியின் பெரும் போர் – 2017 வெற்றிக்கிண்ணத்தை கிளிநொச்சி மகா வித்தியாலயம் சுவீகரித்தது(காணொளி) 

303 0

வன்னியின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் இரு பெரும் கல்லூரிகளான கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கும் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கும் வருடம் தோறும் நடைபெறும் மாபெரும் கடினபந்து சுற்றுப்போட்டி 2017  வெற்றிக்கிண்ணத்தை கிளிநொச்சி மகா வித்தியாலயம் சுவீகரித்தது.

ஏழாவது ஆண்டாக நடைபெறும் கடினபந்து சுற்றுப்போட்டி, புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமானது.

நாணைய சுழற்சியில் வென்ற கிளிநொச்சி மகா வித்தியாலய அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்ததையடுத்து புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி அணி துடுப்பெடுத்தாடியது.

இந்நிலையில் புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி அணி 43.3 பந்து பரிமாற்றங்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 107 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி மகா வித்தியாலய அணி 45 பந்து பரிமாற்றங்களில் 9 விக்கற் இழப்புக்களிற்கு 208 ஓட்டங்களை பெற்றவேளை தமது வெற்றி இலக்குக்கு ஓட்டங்கள் போதுமென அணித்தலைவரால் தீர்மானிக்கப்பட்டதையடுத்து துடுப்பாட்டத்தை இடை நடுவில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியிடம், கிளிநொச்சி மகா வித்தியாலய அணி கொடுத்தது.

தமது இரண்டாவது இனிக்ஸ்சை தொடர்ந்த புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணி இரண்டு பந்துகளை எதிர்கொண்டநிலையில் வெளிச்சம் போதவில்லை என அணித்தலைவரால் தெரிவிக்கப்பட்டதை அடுத்து நேற்றயதினம் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

மீண்டும் இன்று காலை ஒன்பது மணிக்கு தமது ஆட்டத்தை ஆரம்பித்த புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணி 24 பந்து பரிமாற்றங்களில் அனைத்து விக்கெட் இழப்புக்களிற்கு 41 ஓட்டங்களை பெற்றுக்கொண்டநிலையில் கிளிநொச்சி மகாவித்தியாலய அணி ஒரு இனிக்ஸ் ஆலும் அறுபது ஓட்டங்களினாலும் ஏழாவது வன்னியின் பெரும் போர் வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.