தெரிபெஹெ பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

17 0
கண்டி – தெரிபெஹெ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தியம்பராயாய பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெரிபெஹெ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட  சந்தேகநபர் வேகும்புர, தெரிபெஹெ பகுதியைச்  சேர்ந்த 45 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தெரிபெஹெ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.