கடந்த கால ஆட்சியாளர்கள் மீது குற்றம் சுமத்துவதை விடுத்து மக்களின் கேள்விகளுக்கு பதில் அளியுங்கள்

12 0
கடந்த கால ஆட்சியாளர்களை குற்றம் சுமத்துவதை விடுத்து, உங்களிடம் மக்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு பதில் அளியுங்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ் மக்கள் நலன்சார்ந்து எதனையும் செயற்படுத்த முடியாது என்பது தேசிய மக்கள் சக்தியினால்  ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டது எனவும் தெரிவித்தார்.

சாவகச்சேரியில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் வெளியிட்ட கருத்திற்கு பதில் அளிக்கும் வகையில் ஈ.பி.டி.பி. ஊடக செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள காணொளியிலேயே குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தையிட்டி விகாரை தொடர்பாகவும், அதனை எங்களுடைய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தான் கட்டுவித்தது போன்றும் கருத்துக்களை வெளியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் மக்களை திசை திருப்ப முனைந்திருப்பதை அவதனிக்க கூடியதாக இருந்தது.

தையிட்டி விகாரை விகாரம் தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் என்ற அடிப்படையிலே, எமது நிலைப்பாட்டினையும், கடந்த காலங்களிலே அது தொடர்பாக எவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதையும் பல்வேறு சந்தர்ப்பங்களிலே தெளிவுபடுத்தி இருக்கின்றேன்.

குறிப்பாக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, கடந்த வருடம் ஜூன் மாதமளவில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே, அந்த விகாரை கட்டப்பட்டபோது,  விகாரைக்கு சொந்தமான காணியிலேயே அமைக்கப்படுகிறது என்ற எண்ணத்தில் கவனயீனமாக இருந்து விட்டோம் என்பதை வெளிப்படுத்தியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு விகாரத்தை எடுத்து சென்று தவறு நடைபெற்று விட்டதை கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளச் செய்து, முதல் கட்டமாக உடனடியாக விகாரையை சூழவுள்ள காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

ஆனாலும், துரதிஸ்டவசமாக காணிகளை விடுவிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய அளவீடுகள் தொடர்பாக எம்மவர்கள் மத்தியில் காணப்பட்ட புரிதலின்மை காரணமாகவும், தொடர்ச்சியாக நடைபெற்ற தேர்தல்கள் காரணமாகவும், ஆட்சி மாற்றம் காரணமாவும், எமது ஆட்சிக் காலத்தில் அந்த விடயத்தினை பூரணப்படுத்த முடியவில்லை.

ஆனால் இங்கே இப்போது மக்களுக்களின் கேள்வி அதுவல்ல,

கடந்த காலக்களில்,  எல்லாம் தவறாக நடக்கின்றது அனைத்தையும் திருத்தியமைப்போம் என்று சொன்ன நீங்கள் என்ன செய்து கொண்டு இருகின்றீர்கள் என்றுதான் மக்கள் கேட்கின்றார்கள்?

தையிட்டி விகாரை விடயத்தில்கூட, நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில்   அந்தப் பிரதேசத்திற்கு சென்ற நீங்கள் நீதியை பெற்றுத் தருவதாக சொல்லி வாக்குகளை பெற்றதாக காணி உரிமையாளர்களே ஆதங்கப்படுகிறார்கள்.

உங்களுடைய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து மாதங்கள் நிறைவடைந்து விட்டன. நீங்கள் பதவிக்கு வந்து 4 மாதங்கள் இதுவரயில் நீங்கள் எடுத்த முயற்சி என்ன என்றுதான் மக்கள் கேட்கிறார்கள்?

காணி உரிமையாளர்களை  உங்களுடைய அலவகத்திற்கு அழைத்து பேசினீர்கள். அப்போது, காணிகளை விடுவி்க்க முடியாது என்றும், முரண்டு பிடித்தால் 1500 சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்துவோம் என்று உங்களுடைய அமைப்பாளர் காணி உரிமையாளர்களை மிரட்டுகிறார்.

தையிட்டி விகாரைக்கு தீர்வு தருகிறோம் வந்து நீதி அமைச்சர் அதுதொடர்பாக காணி உரிமையாளர்களுடன் அதுதொடர்பாக பேசாமல் ஓடித் தப்புகிறார். அந்த கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் காணி உரிமையாளர்களுக்கு போதனை நடத்துகிறார்கள். இவைதான் உங்களுடைய சாதனைகள்.

வலி வடக்கு பிரதேச  ஒருங்கிதைப்புக் குழுவில் உங்களின் சக நாடாளுமன்ற உறுப்பினர், உங்களால் முன்வைக்கப்படுகின்ற கொழும்பிலே கண்டு கொள்ளப்படுவதில்லை என்பதை வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்.

இதுதான் உண்மை. யதார்த்தம்.

ஆகவே எமது மக்கள் உண்மைகளை புரிந்து கொள்ள வேண்டும். இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே, கடந்த கால ஆட்சியாளர்களின் மீது பழியை போட்டு தங்களுடைய இயலாமைகளை மறைக்க முனைந்து கொண்டிருக்கின்ற நிலையில்,  அவர்கள வழியில்  நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் தங்களுடைய இயலாமையை மறைகக்க எமது எமது செயலாளர் நாயகத்தின் மீது பழியைப் போட முனைபந்திருக்கிறார் என்பதுதான் உண்மை” என்று தெரிவித்தார்.