நல்லாட்சி அரசும் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாக இரணைத்தீவு மக்கள் கவலை (காணொளி)

275 0

நல்லாட்சி அரசை ஏற்படுத்துங்கள் எங்களின் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என மக்கள் பிரதிநிதிகள் சொன்னார்கள் ஆனால் எதுவும் நடக்கவில்லை தங்களால் உருவான நல்லாட்சி அரசும் நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டது. என்று இரணைத்தீவு மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இன்று 06ஆவது நாளாகவும் சொந்த நிலத்திற்கு செல்வதற்கான கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இரணைத்தீவு மக்கள், தாங்கள் மீண்டும் ஊருக்குச் செல்லும் வரை போராட்டத்தில் ஈடுப்படப்போவதாகவும் கூறியுள்ளனர்.

வளமாக வாழ்ந்த தமது ஊருக்கு செல்ல வேண்டும், தங்களது பிள்ளைகளின் வாழ்க்கையாவது நிம்மதியானதாக அமைய வேண்டும் எனவும் அதற்கு தாங்கள் ஊருக்குத் திரும்ப வேண்டும் என கோரிக்கை விடுத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இரணைத்தீவு மக்கள் 1992ஆம் ஆண்டு தங்களின் சொந்த நிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு இன்றுவரை இரணைமாதாநகர் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் 340 வரையான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தாங்கள் சொந்த நிலத்திற்குச் செல்லவும், தங்கி நின்று தொழில் செய்யவும் கோரி கடந்த முதலாம் திகதி முதல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.