இலங்கை அரசியல் பரப்பில் கடந்த சில நாட்களாக சூடான சம்பவங்கள் பல பதிவாகி உள்ளன. அந்தவகையில் அண்மையில் பிள்ளையானுடைய கைதும் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு நாளாந்தம் கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கும் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கும் இடையில் காரசாரமான விவாதம் இடம்பெற்றது.
இதன்போது பிமல் ரத்நாயக்க சாணக்கியனை நோக்கி கடுமையான சொற் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளார். அதாவது வடக்கு கிழக்கை அழித்தவர்களோடு நீங்கள் உறவில் இருந்தவர்கள் அல்லவா என சாணக்கியனை நோக்கி கேள்வி எழுப்பியுளளார்.
மேலும் கிழக்கில் இடம்பெற்ற கடத்தல், கப்பம் பெறுதல் போன்ற நடவடிக்கைகளுடன் தொடர்பில் இருந்தீர்கள் என குற்றம் சாட்டும் போது சாணக்கியனும் அதற்கு எதிராக தனது விவாதத்தை முன்வைத்துள்ளார்.
இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், சமூக வலைத்தளத்திலே மட்டக்களப்பில் 200 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு காணிகளை வைத்திருக்கும் சாணக்கியனுக்கு என்ன ஆகப் போகின்றது என்பது குறித்து சிலர் பதிவுகளை இடடுள்ளனர்.
எனினும், இதன் உண்மை தன்மை வெளிப்படுத்தப்படாத சூழலில் பிமல் ரத்நாயக்க சாணக்கியன் பற்றிய தகவல்கள் பல என்னிடம் இருக்கின்றது. அவற்றை நாடாளுமன்ற ஹன்சார்ட்டிற்கு அனுப்புவதற்கு தயாராக இருக்கின்றேன் என்றும் சாணக்கியனை நோக்கி எச்சரித்துள்ளார்.