பலநாள் திருடர்கள் இருவருக்கு விளக்கமறியல்

18 0

சமையல் எரிவாயு, ஆடு மற்றும் புதிய கூரை தகடுகள் திருடிய சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், கைது செய்யப்பட்ட இருவரும், ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மஸ்கெலிய சாமிமலை கிலனுஜி பிரிவில், நான்கு மாதங்களுக்கு முன்பு    குடியிருப்பாளர் ஒருவர் வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் காணாமல் போயிருந்தது தொடர்பில், மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில், மஸ்கெலியா பொலிஸ் நிலைய குற்ற தடுப்பு பிரிவினர் சனிக்கிழமை (05)  இருவரை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ள பட்ட விசாரணையை தொடர்ந்து  வேறோரு வீட்டில் இருந்து சமையல் எரிவாயு சிலிண்டர் மீட்டெடுக்கப்பட்டது .

அதே​ தோட்டத்தில் மற்றொரு குடியிருப்பாளரின் ஆட்டுத் தொழுவத்தில் இருந்து, ஆடு ஒன்று, கடந்த வாரம்   காணாமல் போயிருந்தது. இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர்,   அருகில் உள்ள தோட்டத்தில் இருந்து ஆடு மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கபட்டது.

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் புதிய வீடுகளின்  வீடு ஒன்றில் கூரை தகடுகள் களவாடப்பட்டு இருந்தன.   கூரை தகடுகளை தாங்களே களவாடி சென்றதாக, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் கடந்த  5 ம் திகதி ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பட்டபோது இருவரையும் பதினான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது