“எங்கள் ஆட்சியில் டாஸ்மாக்கில் எந்த முறைகேடும் இல்லை” – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

12 0

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்தில் நடத்த கூறவில்லை உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கவே கோரினோம் என சட்​டத்​துறை அமைச்​சர் எஸ்​.ரகுபதி விளக்கம் அளித்துள்​ளார். சட்​டப்​பேர​வை​யில் இருந்து அதி​முக உறுப்​பினர்​கள் வெளி​யேற்​றப்​பட்ட நிலை​யில், எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி, டாஸ்​மாக் வழக்கு தொடர்​பாக குற்​றச்​சாட்​டு​களை தெரி​வித்​தார்.

இதற்கு பதிலளித்து சட்​டத்​துறை அமைச்​சர் எஸ்​.ரகுபதி பேசி​ய​தாவது: டாஸ்​மாக் வழக்கை உச்ச நீதி​மன்​றத்​தில் எல்லா வழக்​கு​களை​யும் சேர்த்து ஒன்​றாக விசா​ரி​யுங்​கள் என்​று​தான் நாங்​கள் கேட்​டிருக்​கிறோமே தவிர, வேறு மாநிலத்​துக்​குச் சென்று எங்​களு​டைய வழக்கை விசா​ரிக்க வேண்​டும் என்று நாங்​கள் கேட்​க​வில்​லை.

டாஸ்​மாக்​கில் திடீர் சோதனை நடந்தது. ஆனால், என்ன தொகை, எவ்​வளவு என்​பதை அவர்​கள் வெளி​யிட​வில்​லை. பாஜக தலை​வர் ஆயிரம் கோடி என்​றார்.அதைத்​தொடர்ந்தே அமலாக்​கத்​துறை தெரி​வித்​தது. அதையே​தான், பழனி​சாமி​யும் கூறி​னார்.

நிச்​சய​மாக எங்​கள் ஆட்​சி​யில் டாஸ்​மாக்​கில் எந்த முறை​கேடும் இல்லை. அந்த வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தில் விசா​ரிக்​கப்பட வேண்​டும் என்ற கோரிக்​கையை தான் நாங்​கள் அங்கே முன் வைத்​தோம். நீதி​மன்​றத்​தில் உள்ள வழக்கு பற்றி பேரவையில் பேசக்​கூ​டாது.

சில தினங்​கள் முன் பிரதமர் நரேந்​திர மோடி, இலங்கை சென்று அதிபரிடம் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். அப்​போது நம்​முடைய மீனவர்​களைப் பற்​றியோ கச்​சத்​தீவை பற்​றியோ பேச​வில்​லை. வழக்கு நடத்​தி, தண்​டனை அனுப​வித்த பின்​னரே படகு​களை மீட்டு மீனவர்​களே திரும்​பி​யுள்​ளனர்.

அமைச்​சர் கே.என்​.நேரு வீட்​டில் நடை​பெறும் சோதனையை பொருத்​தவரை, அமலாக்​கத் துறை அதி​முகவைப்​போல் பாஜக​வின் அரசி​யல் முத்​திரை குத்​தப்​ப​டாத ஒரு கூட்​டணி கட்​சி​யாகத்​தான்​ பார்க்​கிறோம்​. இவ்​வாறு அவர்​ பதிலளித்​தார்​.