முதியவரை காணவில்லை

376 0

1469253132-7015யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் காது கேளாத, வாய்ப்பேச இயலாத 86 வயதான முதியவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
கடந்த ஆறு தினங்களுக்கு முன்னதாக அவர் அரியாலையில் உள்ள தமது வீட்டுக்கு அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பூனகரி மற்றும் யாழ்ப்பாண காவற்துறை நிலையங்களில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக, அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.