இந்தோனேசியாவின் சுமத்ராவில் இடம்பெற்ற சிறையுடைப்பில் சுமார் 200 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெக்கன்பரு நகரில் உள்ள சியலங் பங்குக் சிறையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
நேற்று இடம்பெற்ற தொழுகையை அடுத்து சிறை அறைகளில் இருந்து சுமார் 200 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
எனினும், அவர்களில் பலர் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
300 பேரை மாத்திரம் சிறைப்படுத்தி வைக்கக்கூடிய அந்தச் சிறையில் ஆயிரத்து 900 பேர் வரை அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அங்கு 6 காவலாளிகள் மாத்திரமே பணியில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே, குறித்த சிறையுடைப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து, குறித்த காவல்துறையினரும், இராணுவத்தினரும் குறித்த சிறையின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிறையிலிருந்து தப்பிச் சென்றவர்களைக் கைதுசெய்ய அந்நாட்டு பாதுகாப்புத் தரப்பினர் நடவடி;ககை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.