அமெரிக்க குடியுரிமையைக் கைவிட தாம் ஒருபோதும் தயாரில்லை என முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஸபக்ஷவுக்கும் தமக்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை இல்லாதொழிக்கும் நோக்கிலேயே, இரட்டைக் குடியுரிமையைக் கொண்டவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியாது என்ற சட்டம் கொண்டுவரப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது நல்லது அல்ல. ஏனெனில், இங்கு குடியுரிமை அற்ற அர்ஜுன மகேந்திரனுக்கு மத்திய வங்கியின் ஆளுநர் பதவி வழங்கப்பட்டமை அபாயமான விடயமாகும் என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, தமது மனைவியும், பிள்ளைகளும் அமெரிக்காவில் வசிப்பதாக தெரிவித்துள்ள அவர், அந்தக் குடியுரிமையை வைத்துக்கொண்டே தாம் அரசியலுக்கு வந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, அமெரிக்க குடியுரிமையை கைவிடத் தாம் தயாராக இல்லை என பஸில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.