மோடியின் இலங்கை விஜயம் தொடர்பான பயண நிகழ்ச்சி நிரல்

254 0

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பயண நிகழ்ச்சி நிரல் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அரசாங்க தகவல் திணைக்களம் இந்த நிகழ்ச்சி நிரல் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் 11 ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தை வந்தடையும் பிரதமர் மோடி, 12 ஆம் திகதி காலை 9 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச விசாகப் பண்டிகை நிகழ்வில் பங்கேற்கவுள்ளார்.

இதையடுத்து, டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை திறப்பு விழாவில் அன்றைய தினம் முற்பகல் 11.15 அளவில் மோடி பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கண்டியில் இந்திய பிரதமர் பங்கேற்கும் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச மேற்கொள்கிறார்.

டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 12 ஆம் திகதி பிற்பகல் 3 மணியளவில் இந்தியா புறப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.