மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 13 ஆம் திகதி சனிக்கிழமை சீனாவிற்கு செல்கின்றார். சீனா செல்லும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்நாட்டு தலைவர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட உயர் மட்டத்தினரை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
பிரதமருடன் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, நிரோஷன் பெரேரா மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோரும் செல்ல உள்ளனர். எதிர்வரும் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகின்ற நிலையில் மறுநாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனா செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.