வெசாக் தினத்தில் கறுப்பு கொடிகளை ஏற்ற இடமளிக்க போவதில்லை: மங்கள

229 0

வெசாக் பௌர்ணமி தினத்தில் கறுப்பு கொடிகளை ஏற்ற வங்குரோத்து அரசியல்வாதிகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சர்வதேச வெசாக் தினமாக இந்த வெசாக் தினத்தை கொண்டாட கிடைத்த சந்தர்ப்பம் மிகவும் வணக்கத்திற்குரியது எனவும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் வெளிவிவகார அமைச்சராக இருந்த லக்ஷ்மன் கதிர்காமரின் முயற்சியின் பலமான சர்வதேச வெசாக் தினம் அறிவிக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்த சர்வதேச வெசாக் விழாவுக்கு ஷிரந்தி ராஜபக்ச உள்ளிட்ட குழுவினர் சென்றனர்.இந்த குழுவினர் மூன்று தினங்களில் 250 லட்சம் ரூபாவை செலவிட்டனர் எனவும் அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.