பெட்ரோல் பங்குகளுக்கு சிப்செட் விற்ற நான்கு பேர் கைது

269 0

பெட்ரோல் பங்குகளில் குறைந்தளவு பெட்ரோல் விநியோகம் செய்ய உதவும் மின்னணு சிப்களை விற்பனை செய்ததாக நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெட்ரோல் பங்குகளில் குறைந்த அளவு பெட்ரோல் விநியோகம் செய்யும் மின்னணு சிப்களை விற்பனை செய்ததாக நான்கு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

லக்னோ காவல் துறை தலைமையகத்தில் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட நான்கு பேரிடம் இருந்து மின்னணு சிப், எட்டு ரிமோட் கண்ட்ரோல்கள் மற்றும் ரூ.1,83,500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கும்பல் ரிமோட் மூலம் இயங்கும் மின்னணு சிப்களை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளது.

இவர்கள் தயாரிக்கும் சிப் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்டவற்றை குறைந்த அளவு விநியோகம் செய்யும் திறன் கொண்டுள்ளது. சிப் உதவியுடன் பெட்ரோல் விநியோகத்தில் ஐந்து முதல் பத்து சதவிகிதம் வரை குறைக்க முடியும். ரூ.3000 விலையுள்ள சிப் வயர் மூலம் ரிமோட்டுடன் இணைக்கப்பட்டுகிறது.பெட்ரோல் பங்குகளில் பயன்படுத்த தயாரிக்கப்பட்ட மின்னணு சிப்களை கொண்டு மாதம் ரூ.14 லட்சம் வரை பெட்ரோல் பங்குகள் லாபம் ஈட்ட உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.