அமேசான் நிறுவனத்தின் தலைவர் உலகின் மூன்றாவது பணக்காரனானார்

333 0

அமேசான் இணையத்தளமானது பங்குச் சந்தையில் அடைந்த அதீத வளர்ச்சியால் உலகின் மூன்றாவது பணக்காரர் என்ற தரத்துக்கு அதன் தலைவரை உயர்த்தியுள்ளது.

உலகின் மூன்றாவது பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்தை தற்போது அமேஸோன் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெஜோஸ் பெற்றுள்ளார். அவரின் சொத்து மதிப்பு 65.3 பில்லியன் டொலர் என அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உலகிலே பல வருடங்களாக தொடர்ந்தும் மைக்ரோ சொப்ட் தலைவர் பில்கேட்ஸ் முதலாமிடத்திலும்(78 பில்லியன் டொலர்) இரண்டாம் இடத்தில் ஜாரா நிறுவனர் அமான்சியோ ஓர்டிகாவும் (73.1 பில்லியன் டொலர்) மூன்றாம் இடத்தில் தற்போது அமேசான் நிறுவனத்தின் தலைவரும் தெரிவாகியுள்ளனர்.