தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே நடந்திராத, சந்தித்திராத சவால்களோடும், சாதனைகளோடும், இழப்புக்களோடும் நடந்த பெருஞ்சமர் ஆனந்தபுரம் முற்றுகைச்சமர்.அனைத்து உலக நாடுகளின் உதவியுடனும்,பாரிய படைக்கலன்களுடனும், எம் இனத்தை அழித்துக் கொண்டிருந்த சிங்கள இனவெறியர்களை முழுப் பலத்தையும் பிரயோகித்து புதுக்குடியிருப்பு – ஆனந்தபுரப்பகுதியில் இடைமறித்தார்கள் தமிழீழ விடுதலைப்புலிகள்.
ஆனந்தபுரம் கிராமத்தில் நிகழ்ந்த இப்பெரும் சமரை தமிழினம் எப்படிமறப்பது…!
16வது ஆண்டுகள் கடந்தோடிவிட்டன.
( 31.03.2009 – 04.04.2009)
முப்பதாண்டு காலமாக நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக ஆனந்தபுரம் கிராமத்தில் நிகழ்ந்த சமர் கணிக்கப்படுகின்றது.
பாரிய படைக்கல பிரயோகத்துடனும் வல்லாதிக்க அரசுகளின் புலனாய்வு தகவல்களையும் உள்வாங்கியவாறு தமிழர் தேசத்தை முழுமையாக அழிக்கும் வகையில் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை சிறிலங்கா முப்படைகள் மேற்கொண்டது.
வரையறுக்கப்பட்ட போர்த்தளபாடங்களுடனும் ஆட்பல வளத்துடனும் போரிட்ட தமிழர் சேனை வன்னிப் பெருநிலத்தின் பெரும்பகுதியை கைவிட்டு பின்வாங்கியிருந்தது.
புதுக்குடியிருப்பு பிரதேசம் சிறிலங்கா படைகளிடம் வீழ்ந்தபோதும் புலிகளின் அசாத்திய பலத்தை முழுமையாக நம்பிய மக்களும் போராளிகளும் தங்களுக்கு ஒரு சிறிய இடைவெளி கிடைத்தாலும் அதனை சாதகமாக பயன்படுத்தி வெற்றியை பெற்றுவிடமுடியும் என்றே முழுமையாக நம்பியிருந்தனர்.
அந்தவகையில் தான் இறுதியாக அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்திற்கு வெளிப்புறமாக ஆனந்தபுரம் பகுதியில் இறுதிப்போருக்கான அவசர போரரங்கு தலைமையால் ஒழுங்குபடுத்தப்பட்டது.
தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் உட்பட புலிகளின் முக்கிய தளபதிகள் பலரும் அடங்கலாக தளம் அமைத்து பெருமளவிலான முறியடிப்பு தாக்குதல் ஒன்றை திட்டமிட்டுக்கொண்டிருந்தனர்.
புலிகளின் பிரதான போர்க்கலங்கள் அனைத்தையும் உள்வாங்கி திட்டமிடப்பட்ட இத்தாக்குதலுக்காக பெருமளவு போராளிகளும் நிலைப்படுத்தப்பட்டிருந்தனர். தொலைதூர தாக்குதலுக்கேயென வடிவமைக்கப்பட்ட போர்க்கலங்கள் அனைத்தும் குறுந்தூர தாக்குதலுக்காக பயன்படுத்தப்பட்டன.
புலிகளின் இறுதிப் படைவலு சக்திமிக்க சமரசப் ஆனந்தபுரம் சமர் இருந்தது. இந்த சண்டையின் முடிவில் பரந்தன் புதுக்குடியிருப்பு வீதியை கைப்பற்றி மக்களை மீள அந்த இடங்களில் குடியிருத்த வேண்டும் என்பதே தலைமையால் திட்டமிடப்பட்டு தளபதிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது.
இத்திட்டமிடலை ஏதோ ஒரு வகையில் அறிந்துகொண்ட சிறிலங்கா படையினர் எத்தனை இழப்பை சந்தித்தேனும் தடை செய்யப்பட்ட போர் ஆயுதங்களை பயன்படுத்தி என்றாலும், அத்தாக்குதலை முறியடிக்க முடிவெடுத்திருந்தார்கள்.
சுமார் 600 வரையான போராளிகள் இந்த சண்டையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
பெரும் உலக வல்லரசுகளின் உதவிகளால் அதிகரித்திருந்த இராணுவ பலத்தோடு மோதவேண்டும் என்பதால் பெரிய ஆளணி ஒன்றை தரையிறக்க புலிகளும் தயார்ப்பாடுத்தினார்கள்.
தேசியத்தலைவர் தளபதிகள் உட்பட அனைத்து ஆயுத ஆளணிகளும் இந்த சண்டைக்காக தயாராகியிருந்த நிலையில் புலிகள் தமது தாக்குதலை ஆரம்பிக்க முன்னரே இராணுவம் புலிகளின் வினியோக பாதையை முடக்கி தாக்குதலை ஆரம்பித்திருந்தது.
அதன்படி ஆனந்தபுரம் பகுதியை சுற்றிவளைத்து பெட்டி அடித்து நிலைகொண்டிருந்த புலிகளை தனிமைப்படுத்தி முற்றுகை பாணியிலான தாக்குதலை சிறிலங்கா படைகள் முன்னெடுத்தன.புதுக்குடியிருப்பு மண்ணைவிட்டு பின்வாங்கி வரமாட்டேன்” என்று பிடிவாதமாக நின்ற தலைவரை பாதுகாப்பாக பின்னகர்த்திய தளபதிகள் இராணுவத்தின் முற்றுகையை முறியடிப்பதற்காக உறுதியுடன் போர் செய்துகொண்டிருந்தார்கள்.
பாரிய யுத்த களங்களில் பல்லாயிரம் போராளிகளை வழிநடாத்தி சண்டையை வெற்றி பெறச் செய்யும் வீரத்தளபதிகள் தனித்து நின்று போரிட்டுக் கொண்டிருந்தனர்.
தடை செய்யப்பட்ட இரசாயன குண்டுகளை வீசி அந்த இடம் முழுவதையும் நெருப்பு வலயமாக மாற்றி எங்கும் புகை மண்டலம் சூழ்ந்திருக்கும் வேளைகளில் பல்குழல் எறிகணைகள், விமானத்தாக்குதல்கள் என்று சல்லடை போட்டு போராளிகளின் படைவலுவைச் சிதைத்தது.
வீரச்சாவடைந்தவர்களையோ காயப்பட்டவர்களையோ தூக்க நேரமில்லை. தூக்க ஆளுமில்லை.
காயமடைந்த போராளிகளுக்கு மருந்தில்லை. அவர்கள் தங்களை சுட்டுவிட்டு தப்பி பின்னுக்கு செல்லுங்கள் என்று கதறிக்கொண்டிருந்தார்கள்.
வாழ்வா சாவா என்ற நிலையில் புலிகள் செய்த இறுதிப் பாரிய படை நடவடிக்கை மிகப்பெரிய ஆயுத ஆளணி இழப்புடன் முடிந்தது.எதிரிக்குப் பேரழிவை ஏற்படுத்தி நின்ற போரரங்காக ஆனந்தபுரம் அமைந்திருந்தது.
இறுதிவரை உறுதியோடு போரிட்டு பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் ஆதவன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா, கேணல் நாகேஸ், கேணல் தமிழ்ச்செல்வி, கேணல் அமுதா,கேணல் தமிழேந்தி, கேணல் கோபித் என விடுதலைப் புலிகளின் பல முக்கிய தளபதிகள் உட்பட சுமார் நானூறு வரையான போராளிகள் வீரகாவியமானார்கள்.
♦01.03.2009 தொடக்கம் 05.04.2009 வரை
ஆனந்தபுரத்திலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும்
வீரச்சாவைத் தழுவிக்கொண்ட இந்த மாவீரர்களுக்கும் இதில் பெயர் குறிப்பிடத் தவறிய ஏனைய அனைத்து மாவீரர்களுக்கும் இன்றைய நாளில் எமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பிரிகேடியர் தீபன்
பிரிகேடியர் ஆதவன் (கடாபி)
பிரிகேடியர் விதுசா
பிரிகேடியர் துர்க்கா
பிரிகேடியர் மணிவண்ணன்
கேணல் தமிழேந்தி
கேணல் நாகேஸ்
கேணல் தமிழ்ச்செல்வி
கேணல் அமுதா
கேணல் சேரலாதன்
கேணல் அன்ரன்
கேணல் அகிலேஸ்
கேணல் கோபால்
கேணல் ஐயனார்
கேணல் இளங்கீரன்
லெப். கேணல் நளன்
லெப். கேணல் பாரதி
லெப். கேணல் அகநிலா
லெப். கேணல் அறிவரசி
லெப். கேணல் குயில்வேந்தன்
லெப். கேணல் நசீர்
லெப். கேணல் வாகீசன்
மேஜர் சித்தா
மேஜர் ஒளிவாணன்
பூங்குயிலன்
லெப். கேணல் குமரச்செல்வன் (சிறி)
மேஜர் கெங்கா (சங்கீதன்)
லெப். கேணல் அமிர்தாப்
லெப். கேணல் மொழி
லெப். கேணல் சசி
மேஜர் செங்கையாழினி
மேஜர் கலைமகள்
மேஜர் செஞ்சுரபி
லெப்டினன்ட் அகல்மதி
2ம் லெப்டினன்ட் அலையரசி
லெப். கேணல் புரட்சிநிலா
மேஜர் எழில்வேந்தினி
மேஜர் யாழிசை
கப்டன் அருளரசி
கப்டன் யாழரசி
கப்டன் நந்தா
2ம் லெப்டினன்ட்
முகிளினி
கப்டன் தமிழருவி
கப்டன் மகிழன்
மேஜர் குரலமுதன்
லெப். கேணல் மாயவன்
லெப்.கேணல்மகேந்திரம்
லெப். கேணல் மெய்யறிவு
லெப். கேணல் நிலான்
லெப். கேணல் வீஸ்மன்
லெப். கேணல் இளமாறன்
மேஜர் அழகு
மேஜர் தமிழேந்தி
மேஜர் தவம்
மேஜர் எழிச்சி
மேஜர் பாரதி
மேஜர் செங்குமரன்
மேஜர் செம்முகிலன்
மேஜர் தமிழ்பிரியன்
மேஜர் கவியாளன்
கப்டன் மெய்யாளன்
கப்டன் கொடைவெற்றி
கப்டன் இனியவன்
கப்டன் வீரக்கொடி
கப்டன் இகழ்
கப்டன் தூயவன்
லெப்ரினன்ட் இசைமலை
லெப். கேணல் அருந்தா
லெப். கேணல் புனிதா
மேஜர் சுரேந்திரா
/அன்புமதி
மேஜர் இந்துமதி
லெப். கேணல் கிந்துஸ்தானி
லெப். கேணல் அன்பு
லெப். கேணல் ஆனந்தன்
ஆனந்தபுர முற்றுகைச் சமர்
[களத்தில் நேரடியாக நின்ற போராளியின் பதிவு]
{லெப்.கேணல் ராதா வான்காப்புப் படையணி}
ஆனந்தபுர முற்றுகைச் சமரில் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த சகல படையணிகளும் பங்குபற்றியிருந்தன. அதைப்போன்று லெப்.கேணல் ராதா வான்காப்புப் படையணியில் பின்கள பணியிலிருந்த எமது அணி போராளிகள் 40 பேர் ஆனந்தபுர முற்றுகை முறியடிப்புக்காக கணினிபிரிவின் 100ற்கு மேற்பட்ட பெண்போராளிகளை உள்ளடங்கிய தாக்குதல் அணியாக சென்றோம். எமது அணியை தாக்குதல் திட்டத்தின்படி மூன்று அணியாக பிரிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஒரு அணி தடையை உடைக்க மற்ற இரு அணிகளும் உள்நுழைவதே திட்டமாக இருந்தது. மார்ச்சு மாதம் 31 ம்திகதி எங்களது இரு அணிகள் ஆனந்தபுரத்தினுள் சென்றது ஒரு அணி ஆனந்தபுரத்திற்கு வெளியே பச்சைபுல்வெளியில் நிலை எடுத்தது. ஆனந்தபுர முற்றுகையிற்குள் எமது அணியினை சேர்ந்த 25ற்கு மேற்பட்ட நண்பர்களும் அதைபோன்று முற்றுகையை உடைப்பதற்கான முயற்சியில் 5ற்கு மேற்பட்ட நண்பர்களும் வீரச்சாவடைந்திருந்தனர். அதைப்போன்று எமது அணியுடன் வந்த பெண்போராளிகளில் பெரும்பாலானோர் வீரச்சாவடைந்தும் விழுப்புண் அடைந்திருந்தனர். இந்த ஆனந்தபுர முற்றுகைச் சமரில் வீரச்சாவடைந்த எமது அணியினர் விபரங்கள்,
1.லெப்.கேணல் அனுஷன்
2.லெப்.கேணல் கபிலன்
3.லெப்.கேணல் அந்தியாஸ்
4.லெப்.கேணல் இளவரசன்
லெப்.கேணல் ஆற்றலோன்
லெப்.கேணல் பெருங்கீரன்
லெப்.கேணல் ஏழிசை
லெப்.கேணல் மதிவர்மன்
லெப்.கேணல் வல்லவன்
லெப்.கேணல் குலம்
லெப்.கேணல் கண்ணன்
லெப்.கேணல் நிறஞ்சன்
லெப்.கேணல் தயாபரன்
லெப்.கேணல் மைந்தன்
லெப்.கேணல் வண்ணம்
மேஜர் வாணவன்
மேஜர் சோலையப்பன்
கப்டன் சுடரவன்
கால நீட்சியில் எமது நினைவுகளில் ஆனந்தபுர முற்றுகைச் சமரின் பதிவுகளை பதிய முற்பட்ட போதே காலம் பல நினைவுகளை அழித்துள்ளதை உணரமுடிகிறது. எம்மை போன்று வாழும் சகமுன்னால் போராளிகள் உங்களுடன் உடன் களமாடிய நண்பர்களின் நினைவுகளையும் தியாகங்களையும் பதிவிடுங்கள் ஒரு போராளியின் சாவு சாதாரண சாவல்ல அது தமிழீழ விடுதலைக்கான வரலாறு