புங்குடுதீவு பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பேருந்தில் சூட்சுமமான முறையில் மாட்டு இறைச்சியை எடுத்து வந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ்நிலையபிரதானபொலிஸ்பரிசோதகர் சமிலிபலிஹன்ன தெரிவித்தார்.
இந்த சந்தேக நபர்யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என பொறுப்பு அதிகாரி மேலும் தெரிவித்தார். தண்ணீர் எடுப்பதற்கு பயன்படுத்தப்படும் 20 லிட்டர் கேன்ஒன்றுக்குள் வைத்து இந்த மாட்டு இறைச்சி கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் போது 22 கிலோ 800 கிராம் இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது