இது தொடர்பில் தெரியவருவதாவது,
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் இரத்கம பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (02) சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வெளிநாட்டு துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இரத்கம பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இரத்கம பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை (03) மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வெளிநாட்டு துப்பாக்கி, தோட்டா மற்றும் மகசீன் ஆகியவற்றுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரத்கம பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக இரத்கம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.