நெதன்யாகுவின் சகாக்களினால் இஸ்ரேல் அரசியலில் சர்ச்சை

17 0

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் சகாக்களிற்கு கத்தார் அதிகாரிகளுடன் தொடர்புகள் உள்ளமை தெரியவந்ததையடுத்து  இஸ்ரேல் அரசியல் பெரும் சர்ச்சை மூண்டுள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நெருங்கிய சகாக்கள் 2 பேர் கத்தார் நாட்டைப் பற்றி நேர்மறையாக இஸ்ரேலில் விளம்பரப்படுத்த பணம் வாங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் பிரதமர் நெதன்யாகு மீது நேரடியாக குற்றம்சாட்டப்படவில்லை என்றாலும் ஏற்கனவே அவர் மீதான ஊழல் வழக்கு நீண்ட காலமாக நிலுவையிலுள்ள சூழலில் கத்தாருடனான அவரது சகாக்களின் தொடர்புகளைப் பற்றிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் நாட்டைப் பற்றி பொது பிரச்சாரம் மேற்கொள்ள அமெரிக்கவைச் சேர்ந்த ஒருவர் மூலமாகவே நெதன்யாகுவின் சகாக்களுக்குப்  பணம் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

இஸ்ரேலுடன் முறையான இராஜத்தந்திர உறவுகள் இல்லாத கத்தார் நாட்டை இஸ்ரேலியர்கள் ஹமாஸ் படைகளின் ஆதரவாளராக மட்டுமே கருதி வருகின்றனர். இதனால், இஸ்ரேல் மக்களிடையே அந்த நாட்டைப் பற்றி நல்ல கருத்துக்களை உண்டாக்க பணம் பெறப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

 

அமெரிக்காவை சேர்ந்த அந்த நபரும், ஜோனட்டன் உரிச் என்பவரும்,கத்தார் குறித்து சிறந்த அபிப்பிராயத்தை உருவாக்குவதற்காகவும் எகிப்து குறித்து எதிர்மறையான அபிப்பிராயத்தை உருவாக்குவதற்காகவும் வர்த்தக தொடர்பை ஏற்படுத்தினார்கள் என நீதிமன்ற ஆவணம் தெரிவித்துள்ளது.

இந்த சர்ச்சையை இஸ்ரேலிய ஊடகங்கள் கத்தார்கேட் என குறிப்பிட்டுள்ளன