உணவு பாதுகாப்பு சட்டத்தை மீறி, சுகாதாரத்துக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் உணவு தயாரிப்பில் ஈடுபட்டு விற்பனை செய்து வந்த பெண்ணொருவர் மீது மட்டக்களப்பில் சுகாதார அதிகாரிகள் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்
மட்டக்களப்பு நகரிலுள்ள வீடு ஒன்றில் மலசல கூடத்திற்கு அருகில் இடியாப்பம் தயாரித்து அவற்றை பொதுமக்களுக்கு விற்பனை செய்து வந்த பெண்ணொருவர் குறித்து சுகாதார அதிகாரிகளுக்கு பொது மக்களிடமிருந்து கிடைத்த தகவலை அடுத்து குறித்த இடத்துக்கு செய்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மேற்படி சுகாதாரத்துக்கு தீங்கு விளைவிக்கும் இடத்தை கண்டறிந்ததுடன் குறித்த பெண்ணின் மீது வழக்கு தாக்கலும் செய்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ். முரளீஸ்வரனின் பணிப்புரையின் பேரில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் இ .உதயகுமாரின் வழிகாட்டலில் பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த சுகாதாரத்துக்கு தீங்கு விளைவிக்கும் இடத்தை சுற்றி வளைத்து மேற்படி பெண் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளனர்
மலசல கூடத்துக்கு அருகில் இடியாப்பம் தயாரித்து அவற்றை மேற்குறிப்பிட்ட பெண் பொது மக்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.