சிறுமி பாலியல் வன்கொடுமை ; சித்தப்பா கைது

9 0

13 வயதுடைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த , குறித்த சிறுமியின் சித்தப்பா என்ற 45 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என கிராந்துருக்கோட்டே பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி தனது தாயின்  அறிவுறுத்தலுக்கமைய சந்தேக நபரின் வீட்டிற்கு சோளம் கொடுக்கச் சென்றபோது இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு பாடசாலையில் , அவளின் நடத்தையில் மாற்றத்தை கண்ட ஆசிரியர்கள் குறித்த சிறுமியிடம் விசாரித்தபோது இந்த சம்பவம் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் , சந்தேக நபர் புதன்கிழமை (02) அன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராந்துருக்கோட்டே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.