பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் புறக்கணிப்பு

18 0

வவுனியா பல்கலைக்கழகத்தில் மூவினமாணவர்களும் கற்கும் நிலையில் தமிழ்,முஸ்லிம் மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்களின் நிகழ்ச்சி திட்டங்களில் புறக்கணிக்கப்பட்டு சிங்களமாணவர்களே அனைத்திலும் பங்கேற்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது பல்கலைக்கழக விளையாட்டு போட்டிஇடம்பெற்று வரும்நிலையில் அனைத்து விளையாட்டு நிகழ்விலும் சிங்களமாணவர்கள் மட்டுமே பங்கேற்பதற்கு அனுமதிக்கப்படுவதாகவும் தமிழ்முஸ்லிம் மாணவர்கள் முழுமையாக புறக்கணிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதுதொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் கவனமெடுத்து அனைத்து மாணவர்களுக்குமான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும்தெரிவிக்கப்படுகின்றது