உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தேர்தல் திணைக்களம் 18 மில்லியன் வாக்காளர் அட்டைகளை கோரியுள்ள நிலையில் 30 இலட்சம் வாக்காளர் அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளன.
109 உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகளுக்கான தபால்மூல வாக்களிப்புக்குரிய வாக்காளர் அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளன என்று அரச அச்சகத் திணைக்களத்தின் தலைவர் பிரதீப் புஸ்பகுமார தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள அரசாங்க அச்சகத் திணைக்களத்தில் புதன்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
339 உள்ளுராட்சி அதிகாரசபைகளுக்கான வாக்கெடுப்புக்கு 18 மில்லியன் வாக்காளர் அட்டைகளை தேர்தல்கள் ஆணைக்குழு கோரியிருந்த நிலையில் நேற்று வரையில் 30 இலட்சம் வாக்காளர் அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளன.
தபால்மூல வாக்கெடுப்பு மூன்றாம் வாரம் நடைபெறவுள்ளது. 109 உள்ளூராட்சி மன்றத் அதிகார சபைகளுக்கான தபால்மூல வாக்கெடுப்புக்குரிய வாக்காளர் அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளன. அத்துடன் நான்கு மாவட்டங்களுக்குரிய உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளன.
தபால்மூல வாக்கெடுப்புக்கு தேவையான சகல வாக்காளர் அட்டைகளையும் சனிக்கிழமை (05) தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஒப்படைக்க எதிர்பார்த்துள்ளோம்.
அதேபோல் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை எதிர்வரும் 10 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஒப்படைக்க எதிர்பார்த்துள்ளோம் என்றார்.