அமெரிக்காவிற்குள் எல்லையைக் கடக்க முயன்ற 4 இலங்கையர்கள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதன் பின்னர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, இலங்கை இப்போது அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எதிர்காலத்தில் டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்ற கொள்கையின் கீழ் எந்தவொரு இலங்கையரை நாடு கடத்த முயன்றால், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்படைப்பு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறை மற்றும் பிற சட்டங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள வழிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளனர்.
நாடு கடத்தல்
குறித்த 4 இலங்கையர்களும் அமெரிக்க எல்லையை கடக்க முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.