கல்முனைபிரதான வீதியில் விபத்து -ஒருவர் மரணம்

46 0

மட்டக்களப்பு கல்முனைபிரதான வீதியின் கிரான்குளம் விஷ்ணு ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்துச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மின்சார சபை ஊழியர்கள்தடைப்பட்டிருந்த மின்சாரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வேளை மோட்டார்சைக்கிளில் தனது மகனுடன் சென்ற ஒருவர் குறுக்கே இருந்த மின்சாரக் கம்பியில்சிக்குண்டுள்ளனர். இதில் மோட்டார் சைக்கிள் செலுத்தி வந்தவர் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்துள்ளார்.

எனினும் அவருடன் பயணித்த மகன் காயங்களுக்குள்ளாகிவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அதே இடத்தில்இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் குறித்த மின் கம்பிகள் அறுந்திருந்தாலும் மின்சாரபழுதுபார்க்கும் வேலைகள் நடைபெறுகின்றன.

என்பது தொடர்பாக சமிக்ஞை ஏதுமின்றி மின்சாரசபை ஊழியர்கள் செயற்படுவதன் காரணமாக இவ் விபத்து சம்பவம் மீண்டும் அதே இடத்தில்இடம்பெற்றதாக அங்குள்ள பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர். இந்நிலையில்ஸ்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.